ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேருக்கு ரூ.25 லட்சத்தில் மேற்கூரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேருக்கு ரூ.25 லட்சத்தில் மேற்கூரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
 தொன்மையான ஆதிகேசப் பெருமாள் மற்றும் பாஷ்யக்காரர் கோயில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியத்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவமும், ராமாநுஜர் அவதாரத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
 பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் தேர்த் திருவிழாவில் பெருமாள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதே போல் ராமாநுஜர் அவதாரத் திருவிழாவின்போது நடைபெறும் தேரோட்டத்தில் ராமாநுஜர் தேரில் வலம் வருவார்.
 கடந்த மூன்று ஆண்டுகளாக தேருக்கு மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால் தேர் மழைக்காலத்தில் மழையில் நனைந்தும், கோடைக் காலத்தில் வெயிலில் பாதிக்கப்பட்டும் வந்தது. தேரில் இருக்கும் மரச்சிற்பங்கள் பழுதடைந்து வருவதால் மேற்கூரை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தேருக்கு மேற்கூரை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடெண்டர் விடப்பட்டது. நிர்வாக அனுமதிக்காக சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டன.
 தேருக்கு மேற்கூரை அமைக்க கடந்த ஓராண்டாக அறநிலையத்துறை ஆணையர் அலுவலக அனுமதி கிடைக்காததால் இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த அனுமதி அண்மையில் கிடைத்ததைத் தொடர்ந்தது, மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com