சுடச்சுட

    

    திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல: மு.க.ஸ்டாலின் உருக்கமான வீடியோ பேச்சு

    By DIN  |   Published on : 01st March 2019 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin

    சமூகம் மேம்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம், ஒற்றுமையை நிலை நாட்ட உறுதி ஏற்போம் என்றும், திமுக எந்த மதத்திற்குபம் எதிரானது அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இன்று திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 67-வது பிறந்த நாள். இந்த பிறந்த நாளில் அவர் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவை அவரது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.  

    2 நிமிடங்கள் 15 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் சகோதர, சகோதிரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்! சுயமரியாகை, சமூகநீதி, சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்கின்ற இந்த லட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள். "உங்கள் சகோதரனின் குரல்" - இல் இனி உங்களோடு கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. இழந்தவற்றை மீட்போம். தமிழகத்தை காப்போம் என  உணர்ச்சியுடனும், உருக்கமாகவும் பேசியுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai