அபிநந்தன் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு 

அபிநந்தன் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று கன்னியாகுமரி அரசு நலத்திட்ட துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அபிநந்தன் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு 

கன்னியாகுமரி: அபிநந்தன் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று கன்னியாகுமரி அரசு நலத்திட்ட துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கன்னியாகுமரியில் வெள்ளியயன்று நடைபெற்ற விழாவில், பாம்பனில் ரூ. 250 கோடியில் புதிய பாலம், ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே (17.20 கி.மீ.) ரூ. 208 கோடியில் புதிய ரயில் பாதை, மதுரை- சென்னை எழும்பூர் தேஜஸ் ரயில் சேவை, மதுரை-செட்டிகுளம், செட்டிகுளம்-நத்தம் நான்குவழிச் சாலைத் திட்டம், குமரியில் சாலைப் பாதுகாப்புப் பூங்கா மற்றும் போக்குவரத்து அருங்காட்சியகத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி துவக்கிவைத்தார்.

அத்தத்துடன் மதுரை- ராமநாதபுரம் நான்குவழிச் சாலை, குமரி மாவட்டம், மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள், பணகுடி- கன்னியாகுமரி நான்குவழிச் சாலை ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

நலத்திட்டத் துவக்க விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த கூட்டத்தில் உங்களை எல்லாம் சந்தித்தில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது புகழ் அஞ்சலிகளை செலுத்துகிறேன். தமிழக நலன் சார்ந்த அவர் நல்ல பல திட்டங்களை  செயல்படுத்தியுள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் விமானப்படை வீர அபிநந்தன் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். அதேசமயம் தனது சேவைகளுக்கு சமீபத்தில் காந்தி அமைதி விருதுபெற்றுள்ள விவேகானனதா கேந்திரத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சற்று நேரத்திற்கு முன்பு பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளேன்.

இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் நாட்டிலேயே மிகவும் நவீனமான ஒன்றாகும். இது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் அடிப்படையில் முழுக்க முழுக்க சென்னையில் உள்ள ஐ.சி.எப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 1964 புயலில் தனுஷ்கோடி அழிந்த பிறகு இத்தனை ஆண்டுகாலமாக யாரும் இப்பகுதி குறித்து கவனம் செலுத்தவில்லை. ஆனால் தற்போது தாமதமானாலும் பரவாயில்லை என்று நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அத்துடன் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட உள்ளது. 

உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு நாங்கள உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகிறோம். 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாயை விரைவாக வளர்ச்சி பெறச் செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி உழைத்து வருகிறது.   

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான சிறுவிவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் மூன்று தவணைகளாக ரூ.6000 மானியம் அளிக்கும் திட்டமானது கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கபட்டது. தற்போது ஒரு கோடியே பத்துலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு , திட்டம் அறிவிக்கப்பட்ட 24 நாட்களிலேயே முதல் கட்ட மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com