ஊழலை ஒரு வாழ்க்கை வழிமுறையாக என்னால் ஏற்க முடியாது: சூளுரைத்த மோடி 

ஊழலை ஒரு வாழ்க்கை வழிமுறையாக என்னால் ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒரு வாழ்க்கை வழிமுறையாக என்னால் ஏற்க முடியாது: சூளுரைத்த மோடி 

கன்னியாகுமரி: ஊழலை ஒரு வாழ்க்கை வழிமுறையாக என்னால் ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் வெள்ளியன்று நடைபெற்ற விழாவில் சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்  திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நலத்திட்டத் துவக்க விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த பிரதமர் ஒருவர் நான் பொதுமக்களுக்கு ஒரு ரூபாய் ஒதுக்கினால் அதில் 15 பைசா மட்டுமே போய் சேர்கிறது என்று கூறினர்.

அதேபோல மற்றொரு அமைச்சர் பல்வேறு ஊழல்களில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை எல்லாம் ' பூஜ்ய இழப்பு' என்று வர்ணித்தார்.

இவர்களுக்கு வேண்டுமானால் ஊழல் என்பது ஒரு வாழக்கை வழிமுறையாக இருக்கலாம். ஆனால் என்னால் அதை ஏற்க முடியாது. ஊழல் செய்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மத்திய தர வர்க்க மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய ஒரு அமைச்சர் இன்று தனது குடும்பத்திற்கு பெயில் கேட்டு நீதிமன்றங்களில் கெஞ்சிக் கொண்டிருக்கிறார், அவரது கட்சியின் தலைவர குடும்பம் போலவே!

தொழில் செய்வதற் குஇலகுவான நாடுகளின் பட்டியலில் 142-ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 75 ஆவதுஇடத்தில் உள்ளது.

தனது குடும்பத்திற்குத் தேவையான அமைச்சரவையைப் பெறுவதற்காக போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் எல்லாம் தற்போது சேர்ந்து மீண்டும் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார்கள்.

இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்கள்தான் எனது உறவினர்கள். இந்தியாவே எனது குடும்பம்; எனது வாழ்வும் வீழ்ச்சியும் அவர்களுக்காகவே.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com