அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ஆவின் நிலையம் திறக்கத் திட்டம்: அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களிலும்  நவீன ஆவின் விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.


நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களிலும்  நவீன ஆவின் விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
சிவகாசி-திருத்தங்கல் சாலையில் உள்ள காமராஜர் பூங்காவில்,  ரூ. 1 கோடியில் அமைக்கப்பட உள்ள நவீன ஆவின் பால்நிலைய அடிக்கல் நாட்டு விழாவில்  வியாழக்கிழமை பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: 
ஆவின் நிறுவனத்தில்  மாதம்தோறும் ரூ. 250 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதில், ஆவின் நிறுவனத் தயாரிப்புகளான, ஐஸ்கிரீம், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள்  ரூ .25 கோடிக்கு விற்பனையாகின்றன. 
துபை, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில்  திறக்கப்பட்டுள்ள ஆவின் விற்பனை நிலையங்கள்  சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பால் தயாரிப்பு நிலையத்துக்கு  ரூ. 84 லட்சத்தில் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சுழியில் ரூ. 30 லட்சத்தில் பால் குளிரூட்டும்  மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ .10 கோடியில் பால் பொருள்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட உள்ளது.
விருதுநகரில் ரூ .10 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. காரியாபட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் நவீன ஆவின் பால் விற்பனை நிலைங்கள்  அமைக்கப்படும். நாட்டில் உள்ள அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் நவீன ஆவின் பால் விற்பனை நிலையங்கள்  திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதில், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ், ஆவின் பொதுமேலாளர்சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com