மதுரை - சென்னை தேஜஸ் விரைவு ரயில் சேவை தொடக்கம்

மதுரை - சென்னை இடையே அதி நவீன குளிரூட்டப்பட்ட தேஜஸ் விரைவு ரயில் சேவை  மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட மதுரை-சென்னை தேஜஸ் விரைவு ரயில்.
மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட மதுரை-சென்னை தேஜஸ் விரைவு ரயில்.


மதுரை - சென்னை இடையே அதி நவீன குளிரூட்டப்பட்ட தேஜஸ் விரைவு ரயில் சேவை  மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை இயக்குவதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுதல், பாம்பன் புதிய பாலத்துக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் மதுரை - சென்னை இடையே அதி நவீன முழுவதும் குளிரூட்டப்பட்ட விரைவு ரயிலான தேஜஸ் ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழாவை கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
மதுரை  - சென்னை தேஜஸ் விரைவு ரயிலை மதுரையில் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி, மதுரை ரயில் நிலையத்தின் முதல் நடை மேடையில் நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, பிரதமரின் உரை அகன்ற திரையில்  ஒளிபரப்பப்பட்டது.  விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம். மணிகண்டன், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம்  அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியது:  தேஜஸ் விரைவு ரயிலானது அதி நவீன வசதிகளுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட ரயிலாகும். இந்த ரயில் 497 கி.மீ., தொலைவை ஆறரை மணி நேரத்தில் கடக்கும் திறனுடையது. இதன் மூலம் மதுரை மக்கள் மிக விரைவாக சென்னையைச் சென்றடையலாம்.
மேலும், இந்த ரயிலில் தொலைக்காட்சி, இணைய வசதி, சிசிடிவி கேமரா, நவீன கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மக்கள் நலனில் அக்கறையுடைய தமிழக அரசு தொடர்ந்து மக்கள் நலத் திட்டப் பணிகளைத் தொடரும் என்றார்.

தேஜஸ் விரைவு ரயிலின்  உள்புற தோற்றம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com