திமுக கூட்டணியில் எத்தனை தொகுதி?: மாநில செயற்குழு கூட்டத்துக்கு பிறகு நல்ல முடிவு என பாலகிருஷ்ணன் தகவல் 

மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து நாளை மாநில செயற்குழு கூட்டத்துக்கு பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து நாளை மாநில செயற்குழு கூட்டத்துக்கு பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

வரவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் இடம்பெறும் என்ற பேச்சுகள் அடிபட்டு வந்தது. 

இதில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. முஸ்லிக் லீக் மற்றும் கொமதே கட்சிக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இதனிடையே விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

ஆனால், விசிகவுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படவுள்ளது, எந்த சின்னத்தில் விசிக போட்டியிடவுள்ளது என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இந்த தகவலை விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது, 

"திமுகவுடன் ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது எங்களுக்கு தேவையான தொகுதி எண்ணிக்கையை அவர்களிடம் தெரிவித்தோம். ஆனால், திமுக தரப்பில் இருந்து எந்த எண்ணிக்கையும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசுகிறோம் என்றனர். 

இந்நிலையில், இன்று காலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்ற எண்ணிக்கையை அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த எண்ணிக்கை குறித்து நாங்கள் மட்டுமே முடிவு எடுத்துவிட முடியாது. நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூடுகிறது. அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும். 

இடைத்தேர்தல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com