திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது: வைகோ

மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது: வைகோ


மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.  

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பேச்சுவார்த்தை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, 

"நடைபெறவிருக்கிற 17-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஒருவேளை அத்துடன் 21 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டால் இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இயக்கத்தின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் கணேசமூர்த்தி, பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான புலவர் செவந்தியப்பன், சந்திரசேகரன் ஆகியோரால் உடனடியாக இன்று இங்கு வரமுடியவில்லை. திமுகவில் இருந்து சந்திக்கலாமா என்ற செய்தி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தான் கிடைத்தது. 

அதனால், எங்கள் இயக்கத்தினரோடு கருத்து பரிமாறிவிட்டு, நாளை மாலைக்குள் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவை சந்திப்பதற்கு முடிவு செய்திருக்கிறோம். அதனால், இந்த தகவலை தொலைபேசியில் தெரிவிக்க வேண்டாம் நேரில் வந்து தெரிவிக்கலாம் என்பதற்காக வந்திருந்தேன்.  

பேச்சுவார்த்தையில் தாமதம் ஏதும் இல்லை. சுமூகமாக தான் நடைபெற்று வருகிறது" என்றார்.   

மேலும், நாளை மதிமுக உயர்நிலைக் கூட்டம் நடைபெறும் என்றும் வைகோ அறிவித்தார். 

முன்னதாக, இன்று காலை திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதியும், சிபிஐக்கு 2 தொகுதியும் ஒதுக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com