தேர்தல் கூட்டணி: விஜயகாந்த் தலைமையில் நாளை அவசர ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேமுதிக
தேர்தல் கூட்டணி: விஜயகாந்த் தலைமையில் நாளை அவசர ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் மார்ச் 5-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகிக்கிறார். தலைமைக் கழக நிர்வாகிகள்,  உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் முயற்சி செய்து வந்தன. தேமுதிகவிடம் இருந்து முறையான பதில் வராததால், அந்தக் கட்சி கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு திமுக வந்துவிட்டது. ஆனால், தேமுதிகவுடனான கூட்டணிக்கு அதிமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.  பாஜகவும் எப்படியும் தேமுதிகவைக் கூட்டணிக்குள் அழைத்து வந்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்தான் விஜயகாந்த் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com