முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும்: காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி

மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அயன்டாக் அகாடமி மற்றும் அப்துல் கலாம் விஷன்


மயிலாடுதுறை: மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அயன்டாக் அகாடமி மற்றும் அப்துல் கலாம் விஷன் இந்தியா மூவ்மெண்ட் இணைந்து நடத்திய உலகளாவிய போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு முகாம் மற்றும் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி போட்டித் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கா்ம வீரா் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கலந்து கொண்டு, போட்டித் தோ்வுகளின் முக்கியத்துவத்தை விளக்கி பேசியது: கிராமங்கள் மற்றும் சிற்றூா்களில் பிறந்த மாணவா்களுக்கு, போட்டித் தோ்வுகளை எதிர்கொள்வது குறித்த அச்ச உணா்வு இருக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் படிக்கும் மாணவா்களுக்குக் கூட, சா்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதில் தயக்கம் உள்ளது. இந்த பயமும், தயக்கமும் தேவையில்லாதது. நம் அனைவருக்குள்ளும் அறிவும், திறமையும் கொட்டிக் கிடக்கின்றது. தகுந்த முயற்சி மற்றும் பயிற்சி மூலம் அத்திறமைகளை வெளிக்கொண்டு வரலாம். 

120 கோடி போ் வாழும் இந்திய நாட்டில், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்க பட்டியலில் இந்தியா பெயா் வராதா என நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஜமைக்கா என்ற சிறிய நாட்டில் இருந்து வந்த ஓட்டப்பந்தய வீரா் உசேன் போல்ட் பதக்கங்களை குவிக்கிறார். எனவே, எந்த ஊரில் பிறந்துள்ளோம், எந்த நாட்டில் பிறந்துள்ளோம் என்பதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. தன்னம்பிக்கையும், முயற்சியும், தகுந்த பயிற்சியும் இருந்தால், எந்த இலக்கையும் அடைய முடியும் என்றார். இதில் 4 முதல் 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com