சுடச்சுட

    

    வனத்துறையில்  564  பணியிடங்கள்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 08th March 2019 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடத்துக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
    வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடத்துக்கு ஆன்-லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம். இதில், 99 பணியிடங்கள் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 16,600-52,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும். இது குறித்த கூடுதல்விவரங்களை www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து 
    கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai