திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியானது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி

திமுக- காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியானது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.
திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியானது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி

திமுக- காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியானது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் வருகிற 13ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். குமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். ராகுல் காந்தி வருகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து கே.எஸ். அழகிரி பேசியது: ராகுல் காந்தியின் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுவுடமை கட்சித் தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாக இந்தக் கூட்டம் அமையும்.
பிரதமர் மோடி 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது காமராஜரை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி உள்ளார். காமராஜர் மனித நேயம் மிக்கவர், பெருமை மிகுந்த தலைவர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அளவுக்கு காமராஜரை உயர்த்திய பெருமை காங்கிரஸுக்கு உண்டு. எதிர்க்கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கொள்கை ரீதியானது. தொழில், விவசாய வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை உள்ள கூட்டணி என்றார் அவர்.
ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத், முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் பேட்டி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தூத்துக்குடியில் பேட்டியளித்தபோது, மதம், ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி மிரட்டி பணியவைக்கப்பட்ட கூட்டணியாகும். இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
தேமுதிக இரண்டு இடங்களில் கூட்டணி பேசியது தவறு என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com