தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கக் கோரி: செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மீட்பு

தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வியாழக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி
கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலையில் செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஜெய்சங்கரை மீட்கும் தீயணைப்புத் துறையினர். மீட்கப்பட்ட ஜெய்சங்கர் (இடது ஓரம்).
கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலையில் செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஜெய்சங்கரை மீட்கும் தீயணைப்புத் துறையினர். மீட்கப்பட்ட ஜெய்சங்கர் (இடது ஓரம்).


தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வியாழக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வந்தவாசியை அடுத்த பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (45). இவர், வியாழக்கிழமை காலை கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலையில் உள்ள பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி நின்றுகொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதைக் கண்டு அங்கு கூடிய பொதுமக்கள், கீழ்க்கொடுங்காலூர் போலீஸார், வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான கீழ்க்கொடுங்காலூர் போலீஸார், நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வந்தவாசி தீயணைப்புத் துறையினர் ஆகியோர் ஜெய்சங்கரை கீழே இறங்கும்படி கூறினர்.
அப்போது, ஜெய்சங்கர் தனது கையில் வைத்திருந்த 2 பக்கம் கொண்ட கோரிக்கை மனுவை கீழே வீசினார். அதில், தொழிலாளர்களுக்கு அவர்கள் எந்த பணி செய்தாலும் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.350 ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேரம் மட்டுமே அவர்களை வேலை வாங்க வேண்டும். அதற்குமேல் அவர்கள் பணிபுரிந்தால் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறிய தீயணைப்புத் துறையினர் ஜெய்சங்கரை கயிறு மூலம் கட்டி பாதுகாப்பாக கீழே இறக்கினர். இதையடுத்து, மீட்கப்பட்ட ஜெய்சங்கரிடம் கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com