ரூ. 2000 நிதி வழங்கும் திட்டம்: அரசிடம் விளக்கம் கோரியுள்ளோம்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு பேட்டி

சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  தெரிவித்தார்.
ரூ. 2000 நிதி வழங்கும் திட்டம்: அரசிடம் விளக்கம் கோரியுள்ளோம்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு பேட்டி


சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களின் நிலை பற்றி இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (www.nsvp.in)  சரிபார்க்கலாம். 
வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்கள் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். 
அதற்கு 10 நாட்களுக்கு முன்புவரை வந்துள்ள விண்ணப்பங்கள்தான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 
ஒரு வாக்குச்சாவடியில் 14 ஆயிரம் வாக்காளருக்கு அதிகமாக இருந்தால், மீதமுள்ள வாக்காளர்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 
2018-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 65 ஆயிரத்து 972 வாக்குச்சாவடிகள் இருந்தன. 
தற்போது அந்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 664 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால் கூடுதலாக துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் 343 துணை வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 7 ஆக உயரும். தேர்தல் பணிக்காக 3 லட்சத்து 36 ஆயிரத்து 533 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 932 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 91ஆயிரத்து 902 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 88 ஆயிரத்து 447 வாக்கை உறுதி செய்யும் இயந்திரங்களும் கைவசம் உள்ளன. தேவைக்கும் கூடுதலாக இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
முதலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு கடந்த 6-ஆம் தேதி கடிதம் அனுப்பி இருக்கிறேன். 
தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க  பறக்கும் படைகள், கண்காணிப்புப் படைகள் இருக்கின்றன. 
அவற்றை முழுமையாக பயன்படுத்துவோம். எந்தெந்தப் பகுதிகளில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்பதை கண்காணித்து அதைக் கண்டிப்பாக கட்டுப்படுத்துவோம். 
வேட்பு மனு தாக்கல் தொடர்பான தேர்தல் விதிகளில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஓராண்டுக்கான வருமான வரிக் கணக்கை மட்டுமே வேட்புமனுவோடு தாக்கல் செய்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இனி கடந்த 5 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் தடை: பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தத் தேர்தலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. அதற்கான அறிவுரைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அளித்துள்ளோம் என்றார் சாகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com