வரி ஏய்ப்பு விவகாரம்: மு.க.அழகிரி மகளுக்கு பிடிவாரண்ட்

வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகசெல்விக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகசெல்விக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் அஞ்சுகசெல்வி. கடந்த 2009-2010 முதல் 2015-2016 வரை மொத்தம் ரூ. 69 லட்சத்து 38 ஆயிரம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. 
இதுதொடர்பாக அவருக்கு வருமானவரித்துறை பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அஞ்சுகசெல்வி வரி ஏய்ப்பு செய்ததாக கூறி வருமானவரித்துறை கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அஞ்சுகசெல்வியோ, அவர் தரப்பு வழக்குரைஞரோ ஆஜராகவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அஞ்சுகசெல்விக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com