Enable Javscript for better performance
ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்கள் தர்னா: பழைய உற்சவர் சிலையை வைத்து பங்குனி உத்திரவிழாவை நடத்த நிர்வாக- Dinamani

சுடச்சுட

    

    ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்கள் தர்னா: பழைய உற்சவர் சிலையை வைத்து பங்குனி உத்திரவிழாவை நடத்த நிர்வாகம் முடிவு

    By DIN  |   Published on : 11th March 2019 12:56 AM  |   அ+அ அ-   |    |  

    kan

    ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா நடத்த வலியுறுத்தி திரளான பக்தர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பழைய உற்சவர் சிலையை வைத்து பங்குனி உத்திர விழாவை நடத்தப்போவதாகவும், திங்கள்
     கிழமை (மார்ச் 11) கொடியேற்றம் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்தது.
     காஞ்சிபுரத்தில் மண் ஸ்தலமான ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாள்களுக்கு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவின்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கச்சி ஏகாம்பரநாதரை வழிபட்டு செல்வது வழக்கம்.
     இந்நிலையில், பழைய உற்சவர் சிலை பழுதடைந்ததை அடுத்து புதிய உற்சவர் சிலையை வடிவமைக்க அறநிலையத் துறை முடிவு செய்தது. இதற்காக, புதிய உற்சவர் சிலை செய்வதற்கு பக்தர்களிடமிருந்து தங்கம் நன்கொடையாக பெறப்பட்டு, புதிய சிலை செய்யப்பட்டது. இந்நிலையில், இச்சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக பக்தர்கள் தரப்பில் புகார் எழுப்பப்பட்டது.
     அதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது. இதில், புதிய உற்சவர் சிலையில் எள்ளளவும் தங்கம் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
     இதில் ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புதிய உற்சவர் சிலையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
     இந்நிலையில், தற்போது பங்குனி மாதம் என்பதால் பங்குனி உத்திர விழாவை நடத்த பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, கோயில் நிர்வாகம் கடந்த வாரம் கும்பகோணம் நீதிமன்றத்தில் புதிய உற்சவர் சிலையை வழங்கவும், திருவிழா நடைபெறும் வரை அதற்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் மனு அளித்தது. இதற்கு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் பழைய உற்சவர் சிலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது. ஆனால் கோயில் நிர்வாகம் புதிய சிலையை தருமாறு வாதாடி வந்தது.
     இந்நிலையில் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்க வேண்டிய நிலையில், அதற்கான எந்த ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
     இதையடுத்து சனிக்கிழமை இரவு ஏகாம்பரநாதர் கோயில் வாயிலில் திரளான பக்தர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் இவர்களின் தர்னா தொடர்ந்தது. அதையடுத்து கோயில் செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
     பக்தர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க பழைய உற்சவர் சிலையை வைத்து திங்கள்கிழமை பங்குனி உத்திர விழாவை தொடங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து பக்தர்கள் தர்னாவை வாபஸ் பெற்றனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp