
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியது: கன்னியாகுமரியில் துறைமுகத்தை கொண்டுவருவதற்காக துறைமுக நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது.
சிலர் வேண்டுமென்றே துறைமுகத்துக்கு எதிராக விஷம பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தே தீரும். இதன்மூலம் மீனவ சகோதரர்கள் பலனடைவார்கள்.
துறைமுக எதிர்ப்பாளர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். மக்கள் எங்களுக்கு பக்கபலமாக உள்ளனர்.
பாஜக கூட்டணி, மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். கன்னியாகுமரி தொகுதியில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும் என்றார் அவர்.