சுடச்சுட

    

    சுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 11th March 2019 04:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SURULI_FALLS

    தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 5 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

     கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீர் கடந்த மார்ச் 6-ஆம் தேதி அடைக்கப்பட்டதாலும், ஈத்தைக்காடு, அரிசிப்பாறை ஆகிய நீர் ஊற்றுகள் வறண்டதாலும், தண்ணீர் வரத்து நின்றது. அதையடுத்து, சனிக்கிழமை மேற்கு மலைத் தொடர்ச்சிகளில் மழை பெய்தது.

    இதன் எதிரொலியாக, சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் கொட்டியது. 5 நாள்களுக்குப் பிறகு அருவியில் தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர். எனவே, பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai