தமிழகத்தில் இன்றும் நாளையும் 'செம்ம ஹாட்டு மச்சி'   

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துக் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
heat1
heat1

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துக் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும்.

கடந்த ஆண்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கொளுத்தியது.

ஆனால் இந்த முறை மார்ச் மாத துவக்கத்திலேயே வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது.  கோடை வெயில் சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே இப்படி என்றால், அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் எப்படி எல்லாம் இருக்குமோ? என பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துக் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலை காணப்படும்.

சென்னை, வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை 2 முதல் 4 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com