சுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 5 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

 கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீர் கடந்த மார்ச் 6-ஆம் தேதி அடைக்கப்பட்டதாலும், ஈத்தைக்காடு, அரிசிப்பாறை ஆகிய நீர் ஊற்றுகள் வறண்டதாலும், தண்ணீர் வரத்து நின்றது. அதையடுத்து, சனிக்கிழமை மேற்கு மலைத் தொடர்ச்சிகளில் மழை பெய்தது.

இதன் எதிரொலியாக, சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் கொட்டியது. 5 நாள்களுக்குப் பிறகு அருவியில் தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர். எனவே, பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com