பொள்ளாச்சி வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை கூறும் அறிவுரை

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை துன்புறுத்தி, வன்கொடுமை செய்து, அவர்களிடம் இருந்து பணம், நகை பறித்த கும்பலிடம் சிக்கிய 2வது பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை கூறும் அறிவுரை


கோவை: பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை துன்புறுத்தி, வன்கொடுமை செய்து, அவர்களிடம் இருந்து பணம், நகை பறித்த கும்பலிடம் சிக்கிய 2வது பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் 19 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விடியோ எடுத்து மிரட்டிய புகாரின் கீழ் 4 முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் செல்போனில் இருந்து 4 விடியோக்களை ஆய்வு செய்து அதன் மூலம் இந்த கும்பலிடம் சிக்கிய 2வது பெண்ணின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, குற்றவாளிகளின் செல்போனில் இருந்து 4 விடியோக்களை ஆய்வு செய்து ஒரு பெண்ணை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பெண் திருமணமானவர். அவர் தைரியத்தோடு காவல்நிலையத்துக்கு வந்த புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையென்றால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செல்போன்களில் ஏராளமான விடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த இளம் பெண்களின் வழக்குகளையும் தூசு தட்டி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, பொதுமக்களும் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். உங்களுக்கு காவல்துறையிடம் புகார்  அளிக்க விருப்பமில்லை எனில், நீதிபதியிடம் நேரடியாக முறையிடலாம் என்று பொள்ளாச்சி டிஎஸ்பி கே. ஜெயராமன் கூறியுள்ளார்.

இந்த வழக்கில், அரசியல் பிரமுகர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெறுவதால் இது தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டிய வழக்கில், அதிமுகவின் இளைஞர் அணி உறுப்பினர் பொள்ளாச்சி நாகராஜன் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் என் மீது பழிபோட நினைக்கிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், டிஜிபியை சந்தித்து வழக்கு தொடர்பாக தான் பேசியதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com