பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடத் தயார்: வழக்குரைஞர்கள் தரப்பு உறுதி

பாலியல் வழக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகத்தான் வாதாட மாட்டோம் என வழக்குரைஞர்கள் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும்,
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடத் தயார்: வழக்குரைஞர்கள் தரப்பு உறுதி


பாலியல் வழக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகத்தான் வாதாட மாட்டோம் என வழக்குரைஞர்கள் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடத் தயார் என வழக்குரைஞர்கள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

குற்றவாளிகளிடம் இருந்து 4 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் திருநாவுக்கரசின் செல்லிடப்பேசியில் இருந்து 4 விடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விடியோக்களில் இருப்பவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கலாம். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்கும். 

பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் பணம் கேட்டு திருநாவுக்கரசு கூட்டாளிகள் மிரட்டியுள்ளனர். பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்து இறந்த பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பாலியல் வழக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகத்தான் வாதாட மாட்டோம் என வழக்குரைஞர்கள் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடத் தயார் எனவும் வழக்குரைஞர்கள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் இருந்து அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயார் எனவும், பெண்கள் புகார் அளிக்க முன்வந்தால்தான் இனி இதுபோன்று யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வழக்குரைஞர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com