பிஎஸ்என்எல்  நிறுவனத்தை முடக்க மத்திய அரசு முயற்சி: வைகோ

பிஎஸ்என்எல் - தொலைத்தொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
பிஎஸ்என்எல்  நிறுவனத்தை முடக்க மத்திய அரசு முயற்சி: வைகோ


பிஎஸ்என்எல் - தொலைத்தொடர்பு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்- நிறுவனத்தில் இந்தியா முழுவதும்  1 இலட்சத்து 74 ஆயிரத்து 216 பேர் நிரந்தரப் பணியாளர்களாகவும், ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்தத் தொகுப்பு ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். 
இவர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.மேலும், தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் தகவல் தொடர்பு அலுவலகங்களுக்கும், தனியார் கட்டடங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள, தகவல் பரிமாற்ற உயர் கோபுரத்துக்கான பிப்ரவரி மாத வாடகையும் வழங்கப்படாமல் உள்ளது.
பிஎஸ்என்எல் தகவல் தொடர்புத் துறை பிரைம் டைம் என்று சொல்லப்படுகின்ற வர்த்தக நேரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல், அவசரத் தேவைக்குப் பயன்படாமல், தனியார் துறையை ஊக்குவிப்பதற்காக முடக்கி வைக்கப்பட்டு,  இணைப்பு எப்போதுமே மக்களின் தொடர்பு எல்லைக்கு  வெளியிலேயே  இருந்து வருகிறது. பல லட்சம் கோடி ரூபாய் மூலதனம் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தை  சிக்கலாக்கி, தனியாரிடம் தாரை வார்க்கவே மத்திய அரசு விரும்புகிறது என்பது தெளிவாகிறது. 
எனவே,  எல்லா நிலைகளிலும் செயல் இழந்து, மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள மோடி தலைமையிலான மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்புவது மட்டும்தான் ஒரே தீர்வு எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com