சுடச்சுட

  

  ஆவணம் இன்றி எவ்வளவு ரொக்கம் கொண்டு செல்லலாம்? சத்யபிரதா சாஹு விளக்கம்

  By DIN  |   Published on : 15th March 2019 11:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  satya_pradha_sahu


  சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் வாகன சோதனை நடத்தி பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.

  துணி உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கி சில்லறை வணிகம் செய்பவர்களும், மகளுக்கோ, மகனுக்கோ திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பவர்கள் கூட இந்த வாகன சோதனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

  இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் தொடர்பாக முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் - 94454 67707ஐ தொடர்பு கொள்ளலாம் என்றும், 1800 4256 669 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

  மேலும், சந்தேகத்துக்குரிய பணப்புழக்கம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  வாகன சோதனையின் போது, பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும் உரிய ஆவணங்களை காட்டி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றால்தான் பறிமுதல் செய்யப்படும்.

  அதோடு, ரூ.10 லட்சத்துக்கு மேல் உரிய ஆவணத்துடன் பணம் கொண்டு செல்லப்பட்டாலும் அது குறித்து வருமான வரித்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்படும்.

  அதே சமயம் வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் சோதனை நடத்தப்படும் என்றும் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai