சுடச்சுட

  

  தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் கேள்வி

  By DIN  |   Published on : 14th March 2019 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  High-court-of-madurai


  மதுரை: மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.

  இதற்கு, தேர்தல் தேதியை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும், துணை ராணுவ வீரர்களின் உதவியோடு மதுரையில் தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

  இதற்கு, கடமைக்காக தேர்தலை நடத்துகிறதா தேர்தல் ஆணையம்? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஆணையம் பின்வாங்குகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை என திருவிழா சமயத்தில் மதுரையில் மக்களவைத் தேர்தலை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

  இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோயில் திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

  மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. மேலும், மதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளது.

  இதனைக் கேட்ட நீதிபதிகள், பல லட்சம் பேர் கூடும் கோயில் திருவிழாவை கவனத்தில் கொள்ளாமல் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவை நடத்த முடிவெடுத்தது எப்படி?  என்று கேள்வி எழுப்பினார்.

  மேலும், விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்குச்சாவடிகள் இருக்கும். வாக்களிக்க மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறினர்.

  தொடர்ந்து, சூழலை கவனத்தில் கொள்ளாமல், அதிகாரிகள் முடிவெடுப்பது நல்லதல்ல என்றும், ஏப்ரல் 18ம் தேதி மதுரைத் திருவிழாவும், 19ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் இருக்கும் நிலையில் மதுரையில் எப்படி வாக்குப்பதிவை நடத்த முடியும் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

  இது குறித்து தலைமை அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  மதுரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்தால் பிற இடங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai