சுடச்சுட

  

  பொள்ளாச்சி கொடூரம்: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் - சிபிசிஐடி

  By DIN  |   Published on : 14th March 2019 05:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rape


  கோவை: பொள்ளாச்சியில் ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

  பொள்ளாச்சி கொடூரம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், இன்று பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  அதில், பொள்ளாச்சி ஆபாச விடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் எதிரிகள் தொடர்பாக நேரில் புகார் அளிக்க விரும்புவோர் 
  கோவை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், 
  குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை, 

  நெ.800, அவிநாசி ரோடு,

  கோயம்புத்தூர் - 18

  என்ற முகவரியில் நேரில் வந்து புகார்களை அளிக்கலாம்.

  வாட்ஸ்அப் வாயிலாக புகார் அளிக்க விரும்புவோர் 9488442993 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம்.

  ஆனால், இது தொடர்பாக புகைப்படங்களையோ விடியோக்களையோ யாரும் சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

  மேலும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் அளிக்கலாம். வழக்கின் முக்கியத்துவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி புகைப்படம் மற்றும் விடியோக்களை வெளியிட வேண்டாம் என்றும், வழக்கில் தொடர்புடைய எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் கோவை மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai