சுடச்சுட

  

  பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? முதல்வருக்கு கமல்ஹாசன் சரமாரி கேள்வி

  By DIN  |   Published on : 14th March 2019 10:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kamal2


  பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை குற்ற வழக்கில் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விடியோ மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். 

  பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல விடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

  இந்த சம்பவம் தமிழ்நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

  இந்த வழக்கு முதலில் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இன்று சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. 

  இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை தாமதம் இன்றி வழங்கப்படவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விடியோ மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார். 

  விடியோ இணைப்பு கீழே:

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai