சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் போட்டியிட மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் விருப்பமனு விநியோகம்: கேஎஸ் அழகிரி

  By DIN  |   Published on : 14th March 2019 12:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  congress

  மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

  நாட்டின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினமே நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

  இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் 25 ஆயிரமும், தனிதொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் 10 ஆயிரமும் செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளாம் எனவும் அதில் கூறியுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai