சுடச்சுட

    

    வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று வெயில் அதிகரிக்க வாய்ப்பு

    By DIN  |   Published on : 14th March 2019 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sun


    வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  வியாழக்கிழமை (மார்ச் 14) வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: கோடைகாலத்தின் தொடக்கத்தையொட்டி,  வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில்  வியாழக்கிழமை (மார்ச் 14)  வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்படும். 

    தமிழ்நாடு, புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 16) வரை வறண்ட வானிலை நிலவும். தென் தமிழக கடலோரப் பகுதி, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

    4 இடங்களில் வெயில் சதம்: 
    அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, சேலத்தில் தலா 101 டிகிரியும், தருமபுரி,  திருத்தணியில் தலா 100 டிகிரியும் புதன்கிழமை வெயில் பதிவானது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai