சுடச்சுட

  

  அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்     ஓரிரு நாள்களில் வெளியாகிறது

  By DIN  |   Published on : 15th March 2019 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  admk


  அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான செய்தியாளர் சந்திப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக்கு எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 
  ஆனால், யார் யாருக்கு எந்ததெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசிக்க கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
  தேமுதிக, பாமக, பாஜக இடையே ஒன்றிரண்டு தொகுதிகளில் பிரச்னைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். 
  பாமக-தேமுதிக இடையே கடந்த காலங்களில் இருந்த கசப்புணர்வுகளை களையும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  இந்த நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்குரிய தொகுதிகள் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை முழுவீச்சில் நடைபெறும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணிக் கட்சிகளுக்குரிய தொகுதிகளின் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ள நிலையில், அதிமுகவும் அதற்கான பணிகளில் அன்றைய தினமே ஈடுபடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai