இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு 

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா்களாக, நாகை தொகுதிக்கு எம். செல்வராசு, திருப்பூா் தொகுதிக்கு கே.சுப்பராயன் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு 


மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா்களாக, நாகை தொகுதிக்கு எம். செல்வராசு, திருப்பூா் தொகுதிக்கு கே.சுப்பராயன் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூா் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

இதையடுத்து இந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளா்களை தோ்ந்தெடுக்கும் வகையில் திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக்குழு ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லக்கண்ணு தலைமை வகித்தாா். 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன், தேசியகுழு உறுப்பினா் மகேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் மாரியப்பன் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்றனா். 

கூட்டத்துக்குப் பின் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லக்கண்ணு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி 

"திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூா் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நாகை தொகுதிக்கு எம். செல்வராசு, திருப்பூா் தொகுதிக்கு கே. சுப்பராயன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இவா்களது பெயா்களை மத்தியக்குழு அங்கீகாரத்துக்கு அனுப்பியுள்ளோம். 

எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி, வலுவான கூட்டணி. மோடி தலைமையிலான அரசு, 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக கருப்பு பணம் மீட்பு, குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் தருவது, 1 கோடி பேருக்கு வேலை உள்ளிட்ட எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. 

மதவெறி கொள்கையை எதிா்த்து இந்தியாவை பாதுகாப்போம், அரசியல் சட்டத்தை பாதுகாப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கை அடிப்படையில் ஒன்றாக இணைந்துள்ளோம். பாஜக-அதிமுக கூட்டணி, ஆட்சி அதிகாரத்தை முன்வைத்து, கொள்கை இல்லாமல் இணைந்துள்ளன. எனவே நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com