சுடச்சுட

  

  தினமும் உதிக்கும் சூரியனை தேர்தல் சின்னம் என்று மறைத்து விடுவீர்களா?: தமிழிசை கேள்வி

  By DIN  |   Published on : 15th March 2019 01:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamilesaisow

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் பொதுமக்களால் வழக்கப்படி ஆண்டாண்டுகாலமாக வரையப்படும்  தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

  மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படியென்றால் கை காண்பித்தாள் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா?
            
  இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai