சுடச்சுட

  
  STALIN


  கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எவை, எவை என்பது குறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்.  
  திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன. அதில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 மக்களவைத் தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும்  ஒதுக்கப்பட்டுள்ளன.
  தொகுதிகள் முடிவு-இன்று அறிவிப்பு: திமுக கூட்டணியில் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன், அணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்த நிலையில், 10 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் வியாழக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தியது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
  இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கான மக்களவைத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார்.    அண்ணா அறிவாலயத்தில்  நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் தொகுதிப் பட்டியல் குறித்த விவரங்களை ஸ்டாலின் வெளியிட உள்ளார். இதையடுத்து, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தெரிகிறது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai