சுடச்சுட

  

  தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மாட்டுச் சந்தையில் ரசீது அளிப்பு

  By DIN  |   Published on : 15th March 2019 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  erode

  மாட்டுச்சந்தையில் கூடிய விவசாயிகள், வியாபாரிகள். 


  கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், மாட்டு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு செல்லும் தொகைக்கு சந்தை நிர்வாகம் சார்பில் முறையான ரசீது வழங்கப்பட்டது.
  ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.2,000 
  முதல் ரூ.12,000 வரையிலான விலைகளில் 200 கன்றுகள் ரூ.10,000 முதல் ரூ.32,000 வரையிலான விலை மதிப்பில் 300 பசுக்கள் ரூ.12,000 முதல் ரூ.42,000 வரையிலான மதிப்பில் 300 எருமை மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 
  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்,  ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்து வர அச்சப்பட்ட பல வியாபாரிகள்,  ஏடிஎம் அட்டை, பணமில்லா ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் மாடுகளை வாங்க  வந்திருந்தனர்.  இதனால் விற்பனைக்கு வந்த மாடுகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிடக் குறைந்ததுடன், விற்பனையும் குறைந்தது.
   இதுகுறித்து மாட்டுச் சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது:
  தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றைச் சேர்ந்த   வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர்.
  பல வியாபாரிகள் குறைந்த தொகையுடன், ஏடிஎம் அட்டை, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான ஏற்பாட்டுடன் வந்தனர்.தேர்தல் விதிமுறையால் வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, மாடு விற்பனை செய்து, பணத்தைக் கொண்டுசெல்லும் அனைவருக்கும், மாட்டுச்சந்தையில் இருந்து முறையாக ரசீது எழுதி, அவர்களது பெயர் விவரம், விற்பனை செய்யப்பட்ட மாடு விவரம், அந்த மாட்டை வாங்கியவர் விவரம், பரிமாற்றம் செய்யப்பட்ட, கொண்டு செல்லப்படும் ரொக்கத்தின்  அளவு போன்றவற்றைக் குறிப்பிட்டு ரசீது வழங்கி உள்ளோம்.  இந்த ரசீது பெற்றுச் சென்றவர்களிடம் சோதனை நடத்தும்போது, கடந்த காலங்களில் பணத்தைப் பறிமுதல் செய்யாமல் அனுமதித்தனர். 
  தற்போதும் அதுபோல அனுமதிக்க வேண்டும். இருப்பினும் இந்த வாரம் விற்பனைக்கு வந்த மாடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. வழக்கத்தைவிட ரூ.50 லட்சம் வரை குறைவாக விற்பனையானது. இன்னும் 5  வாரங்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai