சுடச்சுட

  

  பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: மாணவர்கள் போராட்டத்தால் இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

  By DIN  |   Published on : 15th March 2019 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  students


  பொள்ளாச்சியில் பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து கடூம் தண்டனை வழங்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொள்ளாச்சியில் இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஆபாச வீடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி தமிழக அரசு இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது. 

  இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பொள்ளாச்சியில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  ஆபாச வீடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொள்ளாச்சியின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

  இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் தொடர்வதை அடுத்து 2-வது நாளாக பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று அடுமலைப்பேட்டையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai