சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளின் விவரங்கள்

    By DIN  |   Published on : 15th March 2019 01:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk

    மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன. 

    அதில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 மக்களவைத் தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

    மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
    பேரத்தின் அடிப்படையிலான கூட்டணி அல்ல, கொள்கை அடிப்படையில் இணைந்துள்ளோம். பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சி மீதான குற்றச்சாட்டை திசைதிருப்ப சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரம் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். திமுக சார்பில் மக்களவை, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்றார். 

    திமுக போட்டியிடும் தொகுதிகள்
    1. வட சென்னை
    2. தென் சென்னை
    3. மத்திய சென்னை
    4. ஸ்ரீபெரும்புதூர்
    5. காஞ்சிபுரம் (தனி)
    6. அரக்கோணம்
    7. வேலூர்
    8. தருமபுரி
    9. திருவண்ணாமலை
    10. கள்ளக்குறிச்சி
    11. சேலம்
    12. நீலகிரி (தனி)
    13. பொள்ளாச்சி
    14. திண்டுக்கல்
    15. கடலூர்
    16. மயிலாடுதுறை
    17. தஞ்சாவூர்
    18. தூத்துக்குடி
    19. தென்காசி (தனி)
    20. திருநெல்வேலி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai