சுடச்சுட

  

  திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் வெளியீடு

  By DIN  |   Published on : 15th March 2019 02:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dmk_alliance

   

  சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், செய்தியாளர்கள் முன்னிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்களை வெளியிட்டார்.

  திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன. அதில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 மக்களவைத் தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  அதன்படி, 


  திமுக போட்டியிடும் தொகுதிகள்

  1. சென்னை வடக்கு
  2. சென்னை தெற்கு
  3. மத்திய சென்னை
  4. ஸ்ரீபெரும்புதூர்
  5. காஞ்சிபுரம் (தனி)
  6. அரக்கோணம்
  7. வேலூர்
  8. தருமபுரி
  9. திருவண்ணாமலை
  10. கள்ளக்குறிச்சி
  11. சேலம்
  12. நீலகிரி (தனி)
  13. பொள்ளாச்சி
  14. திண்டுக்கல்
  15. கடலூர்
  16. மயிலாடுதுறை
  17. தஞ்சாவூர்
  18. தூத்துக்குடி
  19. தென்காசி (தனி)
  20. திருநெல்வேலி

  காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் விவரங்கள்

  1. திருவள்ளூர்
  2. சிவகங்கை
  3. தேனி
  4. விருதுநகர்
  5. கன்னியாகுமரி
  6. புதுச்சேரி
  7. திருச்சி
  8. ஆரணி 
  9. கரூர்
  10. கிருஷ்ணகிரி

  விடுதலைச் சிறுத்தைகள்
  1. விழுப்புரம் 
  2. சிதம்பரம்

  இந்திய கம்யூனிஸ்ட் 
  1. திருப்பூர் 
  2. நாகை 

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
  1.கோவை 
  2. மதுரை

  மதிமுக 
  1. ஈரோடு

  இந்திய ஜனநாயகக் கட்சி
  1. பெரம்பலூர் 

  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
  1. நாமக்கல் 

  முஸ்லிம் லீக்
  1. ராமநாதபுரம்

  என மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என்பதை மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai