ஆரோக்கியமான வாழ்க்கை முறை சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் சிறுநீரகங்களைப் பாதுகாப்பதோடு சர்க்கரை உள்ளிட்ட தொற்றா நோய்களைத் தவிர்க்கலாம் என சேபியன்ஸ் சுகாதார அமைப்பின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராஜன்


ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் சிறுநீரகங்களைப் பாதுகாப்பதோடு சர்க்கரை உள்ளிட்ட தொற்றா நோய்களைத் தவிர்க்கலாம் என சேபியன்ஸ் சுகாதார அமைப்பின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
உலக சிறுநீரக தினத்தையொட்டி, சேபியன்ஸ் சுகாதார அமைப்பு சார்பில் ஆரோக்கியமான சிறுநீரகம் அனைவருக்கும், அனைத்து இடத்திலும் என்ற தலைப்பில் சிறுநீரகம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சேபியன்ஸ் சுகாதார அமைப்பின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பேசுகையில், ஆரோக்கியமான உணவுகள், உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை இளைஞர்கள் கடைப்பிடிப்பதுடன், உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை போன்ற தொற்றா நோய்களைத் தவிர்க்க முடியும் என்றார். 
உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியம்  உங்கள் கையில் என்ற புத்தகத்தை இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அனில்குமார் வெளியிட தொழிலதிபர் ஆர்.டி.சாரி பெற்றுக் கொண்டார். சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறுநீரகப் பாதுகாப்பு குறித்து விளக்கினார். 
இந்த நிகழ்ச்சியில், சேபியன்ஸ் சுகாதார அமைப்பின் அறங்காவலர் ஆர்.சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com