மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கோவையில் பி.ஆர். நடராஜன், மதுரையில் சு. வெங்கடேசன் போட்டி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கோவையில் பி.ஆர். நடராஜன், மதுரையில் சு. வெங்கடேசன் போட்டி


சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களின் விவரத்தை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கோவையில் பி.ஆர். நடராஜன், மதுரையில் சு. வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், 1968ம் ஆண்டு முதல் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.  மதுரைத் தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர் சு. வெங்கடேசன் காவல் கோட்டம் என்ற நூல் இயற்றியதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com