மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவ தொடர்பு எண் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் நோக்கில், சென்னை மாநகராட்சி சார்பில்  தொடர்பு  எண் வெளியிடப்பட்டது.
மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவ தொடர்பு எண் அறிவிப்பு


மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் நோக்கில், சென்னை மாநகராட்சி சார்பில்  தொடர்பு  எண் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.பிரகாஷ் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:
மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் 913 இடங்களில் 3,754 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்குச் சென்று சிரமமின்றி வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்தள வசதி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் தொட்டு உணரக் கூடிய  பிரெய்லி  உள்ளிட்ட  பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட  மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 94454  77699 என்ற  உதவி  எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணுக்கு, மாற்றுத் திறனாளி வாக்காளர், அவர்களது பெற்றோர் அல்லது சமூக ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளலாம்.  தவறிய அழைப்பு அல்லது கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அஃப்) மூலமாகத் தொடர்பு கொண்டு, மாற்றுத் திறனாளி வாக்காளரின் அடையாள அட்டை எண், முகவரி, வாக்குச் சாவடி மையம் போன்ற தகவல்களைத் தெரிவிக்கலாம். 
இவ்வாறு  அளிக்கப்படும்  தகவல்களின் அடிப்படையில்,  மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com