சுடச்சுட

  

  இடைத்தேர்தல் விவகாரத்தில் விரைவில் பதில் மனு: தேர்தல் ஆணையம் உறுதி

  By DIN  |   Published on : 16th March 2019 02:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Tiruvarur by-election Cancelled

   

  மக்களவைத் தேர்தலுடன் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  இந்த மனுக்கள் மீதான விசாரணையில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக்  காரணமாகக் காட்டி எஞ்சியுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடராம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை. வழக்குகள் அனைத்திலும் தேர்தல் நடத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

  இந்த வழக்குகளால் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான மார்ச் 26-ஆம் தேதிக்குள் எஞ்சியுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிக்கப்பட்டது.

  மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த 2 வாரங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்பது மிகவும் நீண்ட காலம். எனவே தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  இந்நிலையில், 18 தொகுதிகளுடன் சேர்த்து மற்ற 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் திமுக எம்.பி-க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முறையீடு செய்தனர். மேலும் தேர்தல் ஆணையத்திலும் மீண்டும் வலியுறுத்தினர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 14 நாட்களுக்கு இழுத்துச்செல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் விரைந்து பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai