சுடச்சுட

  

  ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அறிவிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

  By DIN  |   Published on : 16th March 2019 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dmk_alliance

   

  மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியலையும் தங்களது அணியின் பெயரையும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

  மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 40 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியையும் திமுக ஒதுக்கியுள்ளது. இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.  

  இந்நிலையில், மதிமுக-வுக்கு ஈரோடு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சனிக்கிழமை அறிவித்தார்.

  மேலும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் எம்.செல்வராசு, சுப்பராயன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை நேரில் சந்தித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai