சுடச்சுட

  

  எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு: டிடிவி தினகரன்

  By DIN  |   Published on : 16th March 2019 07:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ttv-dinakaran


  அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி  ஒதுக்கப்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

  17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அந்த கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்படுவதாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 

  இந்நிலையில், இந்த கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படுவதாக அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai