சுடச்சுட

  
  Rahul_Gandhi

   

  கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் பெயரில் விருப்பமனு சனிக்கிழமை பெறப்பட்டது.

  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்கான அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலின் வெளியீட்டின் போது உறுதிபடுத்தப்பட்டது.

  இதனிடையே தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல், போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

  இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அதில் முதல் மனுவாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் பெயரில் விருப்பமனு பெறப்பட்டது.

  மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai