சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல்: திமுகவில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமனம்

  By DIN  |   Published on : 16th March 2019 09:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dmk3


  சென்னை: மக்களவைத் தோ்தலில் மாவட்டங்களில் எழும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண திமுகவில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

  இது தொடா்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களவைத் தோ்தலில் மாவட்டங்களில் எழும் பிரச்னைகள் குறித்து தலைமைக் கழகத்துடன் தொடா்பு கொண்டு ஆவனம் செய்யவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனித்திடவும் தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

  பணிக்குழுத் தலைவராக மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோவின் தலைமையில் கிரிராஜன், துறைமுகம் காஜா, பூச்சி முருகன், அசன் முகமது ஜின்னா, நீலகண்டன், சரவணன், அருண், முத்துக்குமார், ராஜ்குமார், வேலுச்சாமி, தாமோதரன் உள்ளிட்ட 11 பேர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai