சுடச்சுட

  

  ஈரோட்டில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணேசமூர்த்தி யார் தெரியுமா? 

  By DIN  |   Published on : 16th March 2019 07:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  VAIKO


  சென்னை: மக்களவைத் தோ்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அ. கணேசமூா்த்தி போட்டியிடுவார் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

  இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களவைக்கான 17-ஆவது பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று கூறியுள்ளார். 

  திமுகவிலிருந்து பிரிந்து வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அவரோடு சென்ற கணேசமூர்த்தி, மதிமுகவில் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்து, தற்போது அக் கட்சியின் பொருளாளராக இருந்து வரும்கிறார். 1989-இல் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1998-இல் பழனி மக்களவை உறுப்பினராவும், 2009-இல் ஈரோடு மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

  ஈரோடு சென்னிமலை அருகே உள்ள குமாரவலசு என்ற கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி, சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். 1984-இல் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai