சுடச்சுட

  

  300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: பியூஷ் கோயல்

  By DIN  |   Published on : 16th March 2019 07:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Goyal


  மதுரை: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தார். 

  மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக மதுரை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. பாஜக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். 

  மேலும், பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள் என்றும், மோடியை மீண்டும் பிரதமராக்கும் நோக்குடன் கூட்டணி தலைவர்கள் பாடுபடுவார்கள் என கேயல் தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai