மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு


சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் அறிவித்தார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 (மார்ச் 16) மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வேல்முருகன் சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர்,  வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடப் போவதில்லை. திமுக கூட்டணியை மக்களவைத் தோ்தலில் ஆதரிப்பதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com