சுடச்சுட

  
  EPS_OPS

   

  மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) வெளியிடப்பட்டது.

  அதிமுக கூட்டணியில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. மேலும், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  சென்னையிலுள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் கூட்டணித் தலைவர்கள் முன்னிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இணைந்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்களை வெளியிட்டனர்.

  தொகுதிகளின் விவரங்கள் பின்வருமாறு:

  அதிமுக-சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலூடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை (தெற்கு). 

  பாமக- தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்.

  பாஜக- கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி.

  தேமுதிக- கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை (வடக்கு), விருதுநகர்.

  தமிழ் மாநில காங்கிரஸ்- தஞ்சை, புதிய தமிழகம்- தென்காசி, புதிய நீதிக்கட்சி-வேலூர், என்.ஆர்.காங்கிரஸ்-புதுச்சேரி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai