சுடச்சுட

  
  ttv2

   

  17-ஆவது மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழகத்தில் எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

  மக்களவை தேர்தலில் 24 தொகுதிகளிலும், 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். 

  மக்களவைத் தேர்தலில் திருச்சி - சாருபாலா தொண்டைமான், தென்சென்னை - இசக்கி சுப்பையா, மதுரை - டேவிட் அண்ணாதுரை உள்ளிட்டோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் போட்டியிடுகிறார்.

  எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai